கோபி அருகே தீயணைப்பு வீரர் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
கோபி அருகே தீயணைப்பு வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரிடம் இருந்து உருக்கமான கடிதம் சிக்கியது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோபி அருகே தீயணைப்பு வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரிடம் இருந்து உருக்கமான கடிதம் சிக்கியது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தீயணைப்பு வீரர்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டி அடசப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 36). அவருடைய மனைவி கோகிலா. இவர்களுக்கு மவுன வர்ஷினி (4) என்ற மகள் உள்ளாள். சரவணகுமார் கோபியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2 நாட்களாக தற்செயல் விடுப்பு எடுத்து வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை மனைவி தூங்கி எழுந்து பார்த்த போது சரவணகுமாரை காணவில்லை. இதனால் அவரை தேடிப்பார்த்தார். அப்போது சரவணகுமார் வீட்டின் அருகே உள்ள ஓலை குடிசையில் உள்ள மூங்கில் கம்பில் கயிற்றால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
தற்கொலை
இதனால் அதிர்ச்சி அடைந்த கோகிலா இதுபற்றி பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. மேலும் போலீசார் அங்கு சோதனை நடத்தியபோது சரவணகுமாரின் சட்டைப்பையில் இருந்த ஒரு உருக்கமான கடிதம் சிக்கியது. அதை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் சரவணன், ‘என் சாவுக்கு யாரும் காரணமில்லை. எனக்கு உடல் நிலை சரியில்லை’ என்று எழுதி வைத்திருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.