காஞ்சீபுரம் மாவட்டம் பாலாற்றின் கரையோர 30 கிராம மக்களுக்கு வெள்ள அபாயம்
கீழ்பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி்க்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம்,
பாலாற்றின் கிளையாறான பொன்னையாற்றில் 8 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதாகவும் தற்போது பருவமழை பெய்ததால் ஆற்றில் கூடுதலாக தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. எனவே பாலாற்றின் இடது கரையை ஒட்டியுள்ள பெரும்பாக்கம், முத்தவேடு, பிச்சவாடி, விஷார், ஆளவந்தார்மேடு, விப்பேடு, வெங்கடாபுரம், செவிலிமேடு, ஓரிக்கை, சின்னகயப்பாக்கம், கோயம்பாக்கம், வில்லிவளம், வெங்குடி, வாலாஜாபாத், பழையசீவரம், வலது கரையை ஒட்டியுள்ள கோழிவாக்கம், புஞ்சையரசன்தாங்கல், வளத்தோட்டம், குருவிமலை, விச்சந்தாங்கல், ஆசூர், அவலூர், அங்கம்பாக்கம், திருமுக்கூடல், பினாயூர், திருமஞ்சேரி, சாத்தனஞ்சேரி, கலியப்பேட்டை, ஒரக்காட்டுப்பேட்டை, காவித்தண்டலம் ஆகிய 30 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.
மேலும் களப்பணியாளர்கள் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அவ்வப்போது கள வெள்ள நிலவரங்களை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.