கும்மிடிப்பூண்டி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

கும்மிடிப்பூண்டி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2021-10-09 04:43 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் வித்யால் ஜனா (வயது 35). ஓடிசாவை சேர்ந்த இவர், கும்மிடிப்பூண்டி சிப்காட் அடுத்த பாப்பான்குப்பம் கிராமத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது குடும்பத்தினர் ஒடிசாவில் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வித்யால் ஜனா தான் தங்கியிருந்த வீட்டின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்