வேப்பேரியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: ஈ.வெ.ரா. சாலையில் குடிநீர் குழாய்கள் இடமாற்றம்

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-10-09 03:44 GMT
சென்னை,

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் பெருநகர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இப்பணி நடைபெறும் இடத்தில் ஏற்கனவே உள்ள குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய்கள் சென்னை குடிநீர் வாரியத்தால் இடமாற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சுமார் 3.5 மீட்டர் ஆழத்துக்கு குழாய்கள் பதிக்கப்படும். இப்பகுதியில் அமைக்கப்படும் குழாய்கள் மூலம் வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் எழும்பூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட காலத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு சீரான குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்