போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு - 3 பெண்கள் உள்பட 7 பேர் கைது

போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி நில அபகரிப்பில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-09 01:50 GMT
சென்னை,

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் லீலாகுமாரி. இவருக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது. அந்த நிலத்தை போலி ஆவணம் மூலம் சிலர் அபகரித்து விட்டதாக, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

நில அபகரிப்பில் ஈடுபட்டதாக சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த உஷா சக்திவேல் (வயது 37), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சிவமணி (38), வேம்புலி (48) கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த அன்பழகன் (43), படாளம் பகுதியைச் சேர்ந்த முகமது அப்சர் (32), எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ஜெயலட்சுமி (59), ஷெனாய்நகரைச் சேர்ந்த சுமதி சக்திவேல் (52) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்