கார் மோதி ஒருவர் சாவு

கார் மோதி ஒருவர் சாவு

Update: 2021-10-08 22:32 GMT
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள சவலாப்பேரியை சேர்ந்தவர் பாலகுமார் (வயது 45). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்போது அவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலகுமார் நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே மறுகால்தலை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மறுகால்தலை பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது, அந்த பகுதியில் வந்த கார் எதிர்பாராதவிதமாக பாலகுமார் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாலகுமார் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாலகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சீவலப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்