ஆலங்குளம் அருகே கிணற்றில் மிதந்த ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
கிணற்றில் மிதந்த ஆண் பிணம்
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே கிணற்றில் ஆண் பிணம் மிதந்தது. கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆண் பிணம்
ஆலங்குளம் அருகே அய்யனார்குளத்தில் தனியாருக்கு சொந்தமான 80 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. சுமார் 30 அடி ஆழத்தில் தண்ணீர் உள்ள நிலையில், நேற்று காலை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சென்று பார்வையிட்டபோது, அங்கு ஆண் பிணம் மிதப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் சுடலைவேல் தலைமையிலான வீரர்கள் வந்து பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
விசாரணை
அவருக்கு 35 வயது இருக்கும் என கூறப்படுகிறது. இவர் யார், எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.