பெண் இன்ஸ்பெக்டர் வசந்திக்கு நிபந்தனை ஜாமீன்
ரூ.10 லட்சம் பறித்த விவகாரத்தில் பெண் இன்ஸ்பெக்டர் வசந்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;
மதுரை,
ரூ.10 லட்சம் பறித்த விவகாரத்தில் பெண் இன்ஸ்பெக்டர் வசந்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ரூ.10 லட்சம் பறிப்பு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த அர்ஷத் என்பவரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதி புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரரின் கணவர் சம்பந்தப்பட்ட போலீஸ் விசாரணை அதிகாரி முன்பு ஆஜரானார். ஓரளவிற்கு ஒத்துழைப்பு வழங்குகிறார். மனுதாரர் மீது இது தவிர மேலும் 3 வழக்குகள் உள்ளன, என்றார்.
ஜாமீன்
இதையடுத்து நீதிபதி, மனுதாரர் 30 நாட்கள் தினமும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றாலோ, சாட்சிகளை கலைக்க முயன்றாலோ அவரது ஜாமீனை ரத்து செய்யக்கோரலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.