சிலிண்டரால் தாக்கி மனைவி கொலை

திருச்சியில் சிலிண்டரால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-10-08 20:05 GMT
கே.கே.நகர்
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 35). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனிதா(33) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கோபால்,  குடிபோதையில் வீட்டிலிருந்த காலி சிலிண்டரை தூக்கி அனிதாவை தாக்கியுள்ளார்.  இதில், அனிதாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த அனிதாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அனிதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார், கோபால் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். சிலிண்டரால் தாக்கி மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்