விஷம் குடித்து பெண் தற்கொலை

வையம்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-10-08 19:52 GMT
துவரங்குறிச்சி
திண்டுக்கல் மாவட்டம், குட்டத்து ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் தாவீத்ராஜ். இவருடைய மனைவி சகாயமேரி. இவர்களுடைய மகள் சினேகா பிரிட்டோமேரி(வயது 21). இவருக்கும், திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள கருங்குளம் நொச்சிமேடு பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியருக்கும்(வயது 27) கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சினேகா பிரிட்டோ மேரி ஏற்கனவே 2 முறை கர்ப்பமான நிலையில், கலைந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் அவர் கர்ப்பமான நிலையில், மருத்துவ பரிசோதனையில் முறையாக சிசு வளரவில்லை என்று கூறி அதனையும் கலைத்து விட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட சினேகா பிரிட்டோ மேரி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார்.
சாலை மறியல்
இதையடுத்து அவரை வையம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார்சினேகா பிரிட்டோ மேரி யின்உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சினேகா பிரிட்டோ மேரியின் தாய் சகாயமேரி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
 இந்நிலையில் நேற்று மாலை அரசு மருத்துவமனைக்கு வந்த கோட்டாட்சியர் சிந்துஜா, சினேகா பிரிட்டோ மேரிவின் தற்கொலை குறித்து அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணை முடிய நீண்டநேரம் ஆனதால் நாளைதான் (இன்று) பிரேத பரிசோதனை செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. இதையடுத்து, புகார் அளித்தபோது கேட்ட பணத்தை கொடுக்காததால் வேண்டுமென்றே கோட்டாட்சியர் விசாரணையை போலீசார் தாமதப்படுத்தியதாக சினேகா பிரிட்டோ மேரியின் உறவினர்கள் குற்றம் சாட்டியேதாடு, உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உடலை ஒப்படைக்கக்கோரி அரசு மருத்துவமனை முன்பு மணப்பாறை - புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல் சினேகா பிரிட்டோ மேரியின் உறவினர்களில் மேலும் சிலர் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கருங்குளம் பிரிவு சாலை அருகே மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜனனிபிரியா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உடலை ஒப்படைப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து 2 இடங்களிலும் மறியல் கைவிடப்பட்டது. 

மேலும் செய்திகள்