அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது
தாயில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணி அண்ணா காலனி மற்றும் அரசரடி காலனியில் உள்ள வீடுகளில் சட்டவிரோதமாக தொடர்ந்து பட்டாசு தயாரிப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில் வெம்பக்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையில் போலீசார் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது முருகன் (வயது 55), அரசரடி காலனியை சேர்ந்த மகேஸ்வரன் (52), கண்ணன் (52), மாரியப்பன் (37) ஆகியோரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் தலா 20 கிலோ சரவெடிகள் மற்றும் கார்ட்டூன் வெடிகள் அனுமதியின்றி தயாரிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த வெடிகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை 4 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.