மழையில் நனைந்து நெல் முளைத்து வீணாகும் அவலம்

நீடாமங்கலம் பகுதியில் மழையில் நனைந்து நெல் முளைத்து வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-10-08 19:24 GMT
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் பகுதியில் மழையில் நனைந்து நெல் முளைத்து வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் முளைத்து வீணாகும் அவலம்
நீடாமங்கலம் வேளாண்மை கோட்டத்தில் தற்போது குறுவை அறுவடை எந்திரம் மூலம் நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய ரிஷியூர், தேவங்குடி, சித்தமல்லி, முன்னாவல்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது.
கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகளால் கொண்டுவரப்பட்ட நெல் சாலைகளில் கொட்டி இரவு பகலாக பாதுகாத்து வருகின்றனர். நீடாமங்கலம் பகுதியில் மழை காரணமாக சாலைகளில் கொட்டி வைக்கப்பட்ட நெல் ரிஷியூர் உள்ளிட்ட பகுதிகளில் முளைத்து வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. . 
விரைவில் கொள்முதல் செய்ய கோரிக்கை
மழை பெய்யாத நேரத்தில் நெல்லை காயவைக்கும் பணியில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நகை, பொருட்களை அடகுவைத்து சிரமத்திற்கிடையே சாகுபடி செய்த நெல் முளைத்து நாற்றாகவுள்ளது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கவலை அடைந்துள்ளனர். எனவே அரசு மழை காலத்தை கருத்தில் கொண்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அதிகப்படுத்தி மழை காலத்திற்கு முன்பு விரைவில் கொள்முதல் செய்திட வேண்டும் என விவசாயிகள் அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்