பாலத்தில் திடீர் பள்ளம்

பாலத்தில் திடீர் பள்ளம்

Update: 2021-10-08 18:53 GMT
பந்தலூர்

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் பந்தலூர் தாலுகாவில் பலத்த மழை பெய்தது. 

அப்போது தேவாலா அட்டியில் இருந்து குஞ்சமூலா ஆதிவாசி காலனிக்கு செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு திடீரென பள்ளம் விழுந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் மரக்கட்டைகளை பொதுமக்கள் அடுக்கினர். மேலும் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்