சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கரூர்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள வேலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாட்ராயன் (வயது 70). இவர் 8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து நாட்டராயனை கடந்த 30.9.2020-ம் ஆண்டு கைது செய்தனர். பின்னர் கரூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
20 ஆண்டுகள் சிறை
இதையடுத்து வழக்கு விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கிற்கான தீர்ப்பை நேற்று கரூர் மகிளா நீதிமன்ற நீதிபதி நசீமா பானு வழங்கினார். இதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக நாட்ராயனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து நாட்ராயன் சிறையில் அடைக்கப்பட்டார்.