பள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் திடீர் மரணம்
பள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் திடீர் மரணம்
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த பள்ளூர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எஸ்.எம்.மணி (வயது 62). இவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஊராட்சி மன்றத் தேர்தலில் பள்ளூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தார். இவருக்கு கை உருளை சின்னம் ஒதுக்கப்பட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இச்சம்பவம் பள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.