தபால் வாக்குகள் போடமுடியாத அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் தேர்தல் பணிக்கு சென்ற அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு சமையலாளர்கள், உதவியாளர்கள் என 347 பணியாளர்கள் தபால் ஓட்டு போட முடியவில்லை. இதுகுறித்து ஒன்றிய தேர்தல் அலுவலர் விநாயகத்திடம் கேட்டபோது படிவம் 15 பூர்த்தி செய்து கடந்த 4-ந்் தேதி 3 மணி வரை கொடுத்தவர்கள் தங்களது தபால் ஓட்டினை செலுத்திக் கொள்ளலாம், படிவம் பூர்த்தி செய்யாத பணியாளர்கள் தங்களது ஓட்டினை செலுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
இதனால் ஒன்றிய தேர்தல் அலுவலருக்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.நடவடிக்கை எதுவும் எடுக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.