ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பற்றி வீடுவீடாக கணக்கெடுப்பு

தடுப்பூசி செலுத்தாதவர்கள் பற்றி வீடுவீடாக கணக்கெடுப்பு

Update: 2021-10-08 17:06 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது 
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 லட்சத்து 6 ஆயிரத்து 697 நபர்களில் 5 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 51 சதவீதம் ஆகும். ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 12 சதவீதம் ஆகும்.

 மாவட்டத்தில் 73 ஆயிரத்து 123 நபர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான காலம் முடிந்து ஊசிபோடாமல் உள்ளனர். அவர்கள் அனைவரும் முதல் தவணை தடுப்பூசி எங்கு செலுத்தினார்களோ அங்கேயே இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் முற்றிலுமாக நோயிலிருந்து விடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இனியும் ஏதேதோ காரணம் சொல்லி தடுப்பூசி போடாமல் இருக்க கூடாது. முதல் முறை முகாம் நடைபெற்ற 630 இடங்களிலும் இம்முறையும் முகாம் நடைபெற உள்ளது.  வீடு வீடாக சென்று தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மற்றும் செலுத்தி கொள்ளாதவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கையிருப்பில் உள்ள 95 ஆயிரம் தடுப்பூசிகள் 5-ம் கட்ட முகாமில் செலுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்