புவனகிரி அருகே 2 தலைகளுடன் பிறந்த அதிசய எருமை கன்று குட்டி

பொதுமக்கள் வேடிக்கை பார்க்க குவிந்ததால் பரபரப்பு

Update: 2021-10-08 16:43 GMT
புவனகிரி, 

புவனகிரி அருகே உள்ள பு.கொளக்ககுடி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன், விவசாயி. இவருக்கு சொந்தமான எருமை மாடு நேற்று காலை 2 தலைகளுடன் கன்றுக்குட்டியை ஈன்றது. இதனிடையே பிறந்த சில மணி நேரங்களில் 2 தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி இறந்து போனது. எருமை மாடு 2 தலைகளுடன் கன்று ஈன்றதை அறிந்த அக்கிராம மக்கள் திரண்டு அதிசய கன்றுக்குட்டியை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்