வானதி சீனிவாசன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
வானதி சீனிவாசன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
கோவை
அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வலியுறுத்தி பா.ஜனதா கட்சி சார்பில் கோவை தண்டுமாரியம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட் டம் நடந்தது. இதில் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தடையை மீறி, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஆர்ப்பாட்டம் நடத்திய வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட 14 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் (143) உள்பட 3 பிரிவுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.