கோவில் குளத்தில் மூழ்கி ஒருவர் சாவு

வல்லாஞ்சேரி வேம்புலி அம்மன் கோவில் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2021-10-08 06:32 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி மலையடிவாரம் பகுதியை சேர்ந்தவர் இயதுல்லா (வயது 40). இவரது மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற இயதுல்லா வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்த போது வல்லாஞ்சேரி வேம்புலி அம்மன் கோவில் குளத்தில் மூழ்கி இறந்து கிடந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இயதுல்லாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்