திருவள்ளூர் அருகே ரெயில் மோதி வாலிபர் சாவு

திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-10-08 05:43 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர்-நெமிலிச்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேந்தவர்? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. இறந்த நபர் கருப்பு நிறத்தில் பேண்டும், கருநீலத்தில் கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்தார். இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்