அதிக பாரம் ஏற்றி வந்த 25 கன்டெய்னர் லாரிகளுக்கு ரூ.8 லட்சம் அபராதம்

எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் அதிக பாரம் ஏற்றி வந்த 25 கன்டெய்னர் லாரிகளுக்கு போக்குவரத்து அதிகாரிகள் ரூ.8 லட்சம் அபராதம் விதித்தனர்.;

Update: 2021-10-08 02:45 GMT
திருவொற்றியூர்,

எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்று காலை போக்குவரத்து அதிகாரிகள் சசிதரன், ஜெயக்குமார், வெங்கடேசன், மாதவன் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 18 கன்டெய்னர் லாரிகளில் அதிகபாரம் ஏற்றி இருப்பதாக ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் 7 லாரிகள் வரி கட்டாமல் இருந்தன. 4 பேர் உடனே வரி கட்டினர். 3 பேர் வரி கட்டவில்லை. அதனால் அந்த 3 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். 

அதன் உரிமையாளர்களிடம் வரியாக ரூ.2 லட்சம் வசூலானது. இதுதொடர்பாக 25 லாரி உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. போக்குவரத்து துறை அதிகாரிகளின் இந்த திடீர் ஆய்வால் கன்டெய்னா் லாரிகளை வழியில் ஆங்காங்கே பல இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். 

போக்குவரத்து துறை அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையை கண்டித்து ஏராளமான டிரைலர் லாரி உரிமையாளர்கள், ஆய்வு செய்யும் இடத்துக்கு வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்