விருதுநகர்,
விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் சத்திரரெட்டியபட்டி ெரயில்வே பாலம் அருகில் 3 கிலோ 600 கிராம் கஞ்சாவை விற்பனை செய்யும் நோக்கத்தில் நின்று கொண்டிருந்தார். அப்பகுதியில் ரோந்து சென்ற பாண்டியன்நகர் போலீசார் மணிகண்டனிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் அவர் மீது வழக்குபதிவுசெய்து அவரை கைது செய்தனர்.