கல்லூரி மாணவியிடம் நகை பறிப்பு

கல்லூரி மாணவியிடம் நகை பறித்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-10-07 18:27 GMT
விழுப்புரம், 
விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையத்தை சேர்ந்தவர் மதுரைமுத்து மகள் மபிதா (வயது 20). இவர் புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் பி.எட். படிக்கிறார். இவர் நேற்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து பொம்மையார்பாளையம் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், திடீரென மபிதா கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்