சொத்தை அபகரிக்க மூதாட்டி கொலை:மகள், மருமகனுக்கு ஆயுள்தண்டனை
சொத்தை அபகரிக்க மூதாட்டியை கொன்ற மகள், மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
மதுரை,
மதுரை கோ.புதூர் பகுதியை சேர்ந்தவர் பாப்பம்மாள் (வயது 80). இவரது பெயரில் சில சொத்துகள் இருந்தன. அந்த சொத்துகளை அபகரிக்கும் எண்ணத்தில் அவரது மகள் நாகேஸ்வரி (53), கணவர் முனியாண்டி ஆகிய இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு பாப்பம்மாளை கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து புதூர் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில், அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி நாகலட்சுமி நேற்று தீர்ப்பளித்தார்.
==========