செங்கம், திருவண்ணாமலை பகுதிகளில் ரூ.5½ லட்சம் விதைகள் விற்பனைக்கு தடை
ரூ.5½ லட்சம் விதைகள் விற்பனைக்கு தடை;
திருவண்ணாமலை
செங்கம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு துறை விதை விற்பனை நிலையங்களில் சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் சண்முகம் தலைமையில் வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் சோமு மற்றும் விதை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். இதில், 14 விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் போது போதிய ஆவணங்களின்றி விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.5 லட்சத்து 49 ஆயிரத்து 950 மதிப்புள்ள 12 ஆயிரத்து 164 கிலோ விதைகள் தற்காலிகமாக விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.