மீனவர்கள், மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள், மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2021-10-07 17:21 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள், மீன்பிடிக்க செல்லவில்லை.
மீனவ கிராமங்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வனவன் மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த மீனவ கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள்  மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.
கோடியக்கரையில் இருந்து மீனவர்கள் தினமும் காலை மற்றும் மாலையில் மீன்பிடிக்க கடலுக்கு செல்வார்கள்.
மீன்பிடிக்க செல்லவில்லை
இந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்துக்கு மேற்பட்ட படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். மேலும் தங்களது வலைகளில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரைகள் வெறிச்சோடி கிடந்தன.

மேலும் செய்திகள்