பெண்ணை கொல்ல முயன்ற கணவனுக்கு 5 ஆண்டு சிறை. திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பு
பெண்ணை கொல்ல முயன்ற கணவனுக்கு 5 ஆண்டு சிறை;
திருப்பத்தூர்
திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஒன்றியம் பள்ளத்தூர் அருகே உள்ள கிழ்குரும்பப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் ராஜேஸ்வரி (வயது43). இவரும் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த லட்சுமணன் (48) என்பவரும் காதல் திருமணம் செய்துகொண்டு கீழ்குருமம்பட்டியில் வசித்து வந்தனர். ஒரு பெண் குழந்தை உள்ளது.
ராஜேஸ்வரி தினமும் கிருஷ்ணகிரிக்கு வேலைக்குசென்று வந்துள்ளார். அவரை தினமும் லட்சுமணன் அழைத்து வந்து பஸ் ஏற்றிவிட்டு, மீண்டும் இரவு அழைத்து செல்வது வழக்கம். மேலும் ராஜேஸ்வரி மீது லட்சுமணன் சந்தேகப்பட்டு அடிக்கடி குடும்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு வேலைக்கு சென்று இரவில் கந்திலி திரும்பிய ராஜேஸ்வரியை அழைத்து சென்ற லட்சுமணன் வழியில் வைத்து ராஜைஸ்வரியை குத்தூசியால் தலை, மார்பு உள்பட பல இடங்களில் குத்திவிட்டு ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி அசின்பானு வழக்கை விசாரித்து லட்சுமணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.