தூத்துக்குடியில் கார் திருட்டு

தூத்துக்குடியில் கார் திருடப்பட்டது

Update: 2021-10-07 14:06 GMT
தூத்துக்குடி:
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் முகமது அசரப் (வயது 63). இவர் கப்பல் பழுதுநீக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தொழில் நிமித்தமாக தூத்துக்குடிக்கு காரில் வந்து உள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் காரை நிறுத்தி விட்டு தங்கி இருந்தாராம். இந்த நிலையில் யாரோ மர்மநபர், அவரது காரை திருடி சென்று விட்டாராம். திருடப்பட்ட காரின் மதிப்பு ரூ.40 லட்சம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து முகமது அசரப் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்