ஆத்தூர் அருகே கோழிக்கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை

ஆத்தூர் அருகே கோழிக்கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-10-07 11:51 GMT
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே உள்ள முக்காணி பரதர் தெருவில் வசித்து வருபவர் ஜேசு.  இவரது மூத்த மகன் பிரசாத் (வயது 34).
இவர் முக்காணி பஜாரில் கோழிக்கறி கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி பிரிட்ஜீத் என்ற மனைவியும் பிரிவிட்வின் என்ற மகனும், பிரிட்ஜோனா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் முக்காணி புதுமனை நாடார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பிரசாத்துக்காக தந்தை புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டு வேலைகளை சென்று பார்க்காமல் நண்பர்களுடன் சேர்ந்து பிரசாத் மதுகுடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் பிரசாத்தை தந்தை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வீட்டு வேலைக்கு தேவையான பொருட்கள் வாங்க ஜேசு, பிரசாத்திடம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் மாலை வரை வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்காமல் இருந்துள்ளார். இதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த பிரசாத் வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளார். அவரை குடும்பத்தினரும், உறவினர்களும் மீட்டு் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக தந்தை ஜேசு அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்