தூத்துக்குடி அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா தொடக்கம்
தூத்துக்குடி அம்மன் கோவில்களில் நவராத்திரிவிழா தொடங்கியது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களிலும் நவராத்திரி விழா தொடங்கியது.
தூத்துக்குடி மேலசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அம்மன் ஆதிபராசக்தி அலங்காரத்தில் காட்சி அளித்தார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக தசரா திருவிழா அன்று அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அம்மன் சப்பரத்தில் உலா வரும் நிகழ்ச்சிகளும் நடக்கிறது.