இருவேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் தற்கொலை

இருவேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2021-10-07 06:16 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி கலிங்கி தெருவை சேர்ந்தவர் கிரிபாபு (வயது 28). இவருக்கு லதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது.இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கிரிபாபு பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள மேலகொண்டையார் கிராமம் பெரியார் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்