கல்குவாரி குட்டையில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி
கல்குவாரி குட்டையில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலியானார்.;
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் பவீன் குமார் (வயது 18). வாலாஜாபாத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம்அதே பகுதியில் உள்ள கல்குவாரி பகுதிக்கு சென்றார். கல்குவாரி குட்டையில் இறங்கிய போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
வீட்டில் இருந்து சென்ற பவீன் குமார் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் தேடியபோது கல்குவாரி குட்டையில் மூழ்கியது தெரியவந்தது. இது குறித்து அந்த பகுதியினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேர தேடலுக்கு பின் மாணவரின் உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.