ஆட்டோ டிரைவரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு - வாலிபர் கைது
வண்டலூர் வெங்கடேசபுரம் அருகே ஆட்டோ டிரைவரிடம் கத்தி முனையில் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஸ்டாலின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 42), ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் வண்டலூர் வெங்கடேசபுரம் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது திடீரென அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்து 500-ஐ பறித்து கொண்டு ஒரு வாலிபர் தப்பிச்சென்று விட்டார். இது குறித்து பாபு ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரிடம் கத்தி முனையில் பணம் பறித்த மதுரவாயல் பகுதியை சேர்ந்த கணேசன் (25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.