பெண் டாக்டர் வீட்டில் திருட்டு

பெண் டாக்டர் வீட்டில் திருட்டு

Update: 2021-10-06 22:23 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. சி. காலனி ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி பரிமளா (வயது 60). டாக்டரான இவர் தச்சநல்லூரில் கிளினிக் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பரிமளா வெளியூருக்கு சென்றார். நேற்று காலை அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த 2 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் மற்றும் குத்து விளக்கு ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்