ரூ.19 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

ரூ.19 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2021-10-06 21:19 GMT
செம்பட்டு
சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது தஞ்சையை சேர்ந்த சுபாஷ் என்ற பயணி தனது உடலில் மறைத்து எடுத்து வந்த சுமார் 400 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. அதன் மதிப்பு ரூ.19 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்