குடிநீர் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராமப்புற குடிநீர் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் காலமுறைஊதியம், ஓய்வூதியம், ஊதியஉயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட 10 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். மாவட்டகுழு உறுப்பினர் பழனிச்செல்வம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கட்டக்குளம் ராமசந்திரன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் சங்க பொதுசெயலாளர் செல்வம் தொடங்கி வைத்து கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். இதில் மாவட்டதலைவர் சேது, பொருளாளர் பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர்கள் முகமது அனிபா, தனம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டனர். ஆர்ப்பாட்டத்தில் குடிநீர் ஆபரேட்டர்கள், தூய்ைம பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றியசெயலாளர் சரவணக்குமார் நன்றி கூறினார்.