வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை- பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2021-10-06 20:05 GMT
வேப்பந்தட்டை:

நகை- பணம் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெள்ளுவாடி கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலை (வயது 46). இவரது கணவர் அண்ணாதுரை, மகன் வீரமணி ஆகியோர் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். மகள் ஷோபனாவுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அஞ்சலை நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு ஆத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று காலை அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து கை.களத்தூர் போலீசில் அஞ்சலை கொடுத்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்