சாமுண்டீஸ்வரி கோவிலில் சண்டி யாகம்

சாமுண்டீஸ்வரி கோவிலில் சண்டி யாகம் நடைபெற்றது.;

Update: 2021-10-06 20:00 GMT
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி கோவில் சன்னதியில் உள்ள மகா பிரத்தியங்கரா தேவிக்கு புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது. இதில் மிளகாய் வத்தல் மற்றும் ஏராளமான பூசணிக்காய், பரங்கிக்காய்கள் ஆகியவற்றை யாக குண்டத்தில் போடப்பட்டது. மேலும் பல்வேறு மூலிகைகள், பழங்கள், சேலைகள் ஆகியவற்றை யாக குண்டத்தில் இட்டு, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்