காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-06 18:05 GMT
சிவகங்கை, 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா கைது செய்யப்பட்டதை கண்டித்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிவகங்கை கிளை அலுவலகம் முன்பாக  ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட காங்கிரஸ் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி முன்னிலை வகித்தார். காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் சண்முகராஜ், பொதுச்செயலாளர் துரும்புபட்டி தனுஷ்கோடி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராஜரத் தினம், துரைசிங்கம், மகளிர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவி ஸ்ரீவித்யாகணபதி, மாவட்ட தலைவி வேலம்மாள், சிவகங்கை நகர் தலைவர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்