தவறி விழுந்த குழந்தை சாவு

தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2021-10-06 18:00 GMT
காரைக்குடி, 
காரைக்குடி ரயில்வே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது குழந்தை கிருத்திக்ராஜா (வயது2). சம்பவத்தன்று வீட்டின் வாசலில் குழந்தை கிருத்திக்ராஜா விளையாடிய போது தவறி கல்லில் விழுந்ததில் படுகாயம் அடைந்தான். உடனடியாக குழந்தையை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்