10 பேருக்கு கொரோனா

10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-10-06 17:23 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 398 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 4 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 956 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 86 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 356 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்