தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக கூட்டம்

உடன்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக கூட்டம் நடந்தது.

Update: 2021-10-06 13:48 GMT
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் உடன்குடியில் நடந்தது. மாவட்ட தலைவர் ஆஸாத் தலமை தாங்கினார் மாவட்ட பொறுப்பாளர நொலாஸ்கோ முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், உடன்குடி அனல்மின் நிலையத்தில்நமது பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசை கேட்டுக்கொள்வது, கேஸ், பெட்ரோல், டிசல் விலை உயர்வை கட்டு படுத்த மத்திய மாநில அரசை கேட்டுக்கொள்வது  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பொதுமக்கள் நலன்கருதி நிறை வேற்றப்பட்டது.  கூட்டத்தில், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ஜெ.கிதீர், தலைமை செயற்குழு உறுப்பினர் முகமது ரபிக், மாவட்ட துணைச் செயலாளர் இப்ராஹிம், மாவட்ட இணைச்செயலாளர் ஜோதி உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்