இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பலி
திருப்பத்தூரில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் தாலுகா சின்னகசி நாயக்கன்பட்டி, கிராமத்தைச் சேர்ந்தவர் வீரராகவன் பெரியகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணிபுரிகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 45) நேற்று மருமகன் குமரனுடன் இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூரில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தார். கிருஷ்ணகிரி பிரதான சாலையில் தாலுகா அலுவலகம் எதிரில் வந்தபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டார். அப்போது மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறியதில் தமிழ்ச்செல்வி கீழே தவறி விழுந்தார்.
அந்த நேரத்தில் பின்னால் வந்த லாரி அவரது உடல் மீது ஏறி நசுக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.