தடுப்பு சுவரில் உட்கார்ந்து மது அருந்திய தொழிலாளி கிணற்றுக்குள் தவறி விழுந்தார்- தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
தடுப்பு சுவரில் உட்கார்ந்து மது அருந்திய தொழிலாளி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கடத்தூர்
தடுப்பு சுவரில் உட்கார்ந்து மது அருந்திய தொழிலாளி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
மது குடித்தார்
கோபி வாய்க்கால் ரோட்டை சேர்ந்தவர் பில்லா என்கிற நாகராஜ் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் தடுப்பு சுவரில் உட்கார்ந்து மது குடித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது நிலைதடுமாறி அவர் திடீரென கிணற்றுக்குள் விழுந்து விட்டார். 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் சுமார் 50 அடிக்கு தண்ணீர் இருந்தது. தண்ணீர் அதிக அளவில் இருந்ததால், காயம் படாமல் தப்பிய நாகராஜ், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கத்தினார்.
மீட்பு
நாகராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிவந்தார்கள். அவர்களால் நாகராஜை மீட்க முடியாததால், கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் கிணற்றுக்குள் இருந்து நாகராஜை பத்திரமாக மேலே மீட்டு கொண்டு வந்தார்கள்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.