நெல்லை மாநகர பகுதியில் மதுபாட்டில் கடத்திய 4 பேர் கைது

மதுபாட்டில் கடத்திய 4 பேர் கைது

Update: 2021-10-05 22:32 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக இன்று (புதன்கிழமை) மற்றும் வருகிற 9-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் நெல்லை கிராமப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து கூடுதல் மதுபாட்டில்களை வாங்கி கிராம பகுதிகளுக்கு கடத்திச் செல்வதாக நெல்லை மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நெல்லை மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையில், போலீசார் நெல்லை மாநகர் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் மது பாட்டில்களை கடத்தி சென்றதாக நெல்லை தச்சநல்லூர் மேலக்கரையை சேர்ந்த மாரிமுத்து (வயது 36), தாழையூத்து அருகே உள்ள பாலாமடையை சேர்ந்த சுடலை (32), பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்த முத்துக்குமார் (58) மற்றும் பேச்சிமுத்து ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 137 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
......

மேலும் செய்திகள்