கடையில் இரும்பு திருடிய 4 பேர் கைது

கடையில் இரும்பு திருடிய 4 பேர் கைது

Update: 2021-10-05 22:27 GMT
நெல்லை:
நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் நெல்லை தச்சநல்லூரில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து அங்கு இருந்த இரும்புகளை திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் பழைய பேட்டையைச் சேர்ந்த கண்ண பெருமாள் (வயது 29), செல்வகுமார் (25), ராஜா (25), சுடலைமுத்து (24) ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து இரும்புகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்