ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் எம்.ஆர்.பி. செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-05 21:03 GMT
விருதுநகர், 
தமிழகம் முழுவதும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மருத்துவ தேர்வாணைய குழு மூலம் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 15 ஆயிரம் செவிலியர்கள் தமிழகம் முழுவதும் ரூ. 14 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்களித்தபடி தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நேற்று தமிழகம் முழுவதும் துணை இயக்குனர்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநில சங்க செயற்குழுவின் முடிவின்அடிப்படையில் நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு மாவட்ட எம்.ஆர்.பி. செவிலியர்கள் சங்கத்தின் தலைவர் ஜேசுடெல்குவின் தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அமுதலட்சுமி கோரிக்கையை விளக்கி பேசினார். பல்வேறு அரசுஅலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள் பேசினர். இதனை தொடர்ந்து கோரிக்கையைஅரசுக்கு பரிந்துரை செய்ய கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்