பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி எம்ப்ளாயீஸ் யூனியன் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அய்யாச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 40 பேர் கலந்து கொண்டனர். இதேபோன்று ராஜபாளையத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு கிளை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 10 பேர் கலந்து கொண்டனர்.