குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலை

Update: 2021-10-05 20:46 GMT
ருச்சிற்றம்பலம் மற்றும் புனல்வாசல் பள்ளி செல்லும் சாலையில் உள்ள வலசக்காடு பகுதியில் இடையார் தெரு உள்ளது. இந்த பகுதியில் 70-க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இடையர் தெருவில் சாலை சேதமடைந்து ஆபத்தான நிலையில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். தற்போது மழைகாலம் என்பதால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். எனவே, உயிர்பலி ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் .
பொதுமக்கள் வலசக்காடு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே இடையாத்தி ஊராட்சியில் ஆதிதிராவிடர் தெரு உள்ளது. இவர்களுக்கு அந்தப் பகுதியில் தனியாக சுடுகாடு உள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அந்த சுடுகாட்டில் கைப்பம்பு ஒன்று உள்ளது. அது தற்போது பழுதடைந்து உள்ளதால் பொதுமக்கள் ஈமச் சடங்குகளை செய்வதில் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கும் கைப்பம்பை  சீரமைக்க வேண்டும் 
இடையாத்தி ஊராட்சி மக்கள்

அதிராம்பட்டினம் தரகர்தெரு செல்லும் சாலையிலிருந்து பிரிந்து சிவன்கோவில் செல்லும் வழியா மாரியம்மன் கோவில் தெரு, காந்திநகர், ஆறுமுககிட்டங்கி தெரு மற்றும் பிரசித்தி பெற்ற திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய சிவன் கோயில் மற்றும் காய்கறி, மீன்மார்கெட் போன்ற பகுதிகளுக்கு செல்லவேண்டும். இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த சாலையில் நெகிழி, கோழி கழிவுகள், குப்பைகள் கொட்டபடுகின்றன. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இனி மழை காலம் என்பதால் சாலையை பயன்படுத்தும் பொது மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே அப்பகுதி மக்கள் நலன் கருதி குப்பைகளை அகற்ற வேண்டும். 
பாஞ்சாலன் அதிராம்பட்டினம்

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள விண்ணமங்கலம் கிராமத்தில் பூதலூர் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் ராமர் கோவில் மற்றும்ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  போன்ற இடங்களில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த 2 இடங்களிலும் சாலையின் குறுக்கே தகுந்த இடத்தில் வேகத்தடை அமைத்து தர நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ஹரிகரசுதன் களிமேடு

மேலும் செய்திகள்